அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வ‌ர‌ன் திருக்கோயில்,புதுகும்மிடிப்பூண்டி-திரு அண்ணாமலை ஜோதிடம்,கும்மிடிப்பூண்டி- http://jothidamvasthu.blogspot.com/ http://sankarngpd.mywebdunia.com/ http://temple.mywebdunia.com/ http://astrology-vastu.mywebdunia.com/ http://sankarngpd.blogspot.com/ http://paleeswarantemple.blogspot.com/ http://newgummidipundi.blogspot.com/ http://sankarngpd.spaces.live.com S.சங்கர் குருக்கள்

செவ்வாய், 2 ஜூன், 2009

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம்

http://sankarngpd.blogspot.com/
ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்
கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம் என்ன?
வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன. நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சைனஸ், சளித் தொந்தரவுகளுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.கிரகப் பிரவேசத்தின் போது, வெற்றிலையின் மேல் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, விநாயகர் அகவலைப் பாடி, தாராளமாக கிரஹப் பிரவேசம் செய்யலாம். எனவே, கணபதி ஹோமம் செய்து விட்டுதான் கிரஹப் பிரவேசம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. விநாயகரை மனதார வழிபட்டாலே முழுமையான பலன்களை எதிர்பார்க்கலாம். கணபதி ஹோமம் செய்யவில்லை என்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டுத் துவங்க வேண்டும். அதற்கு இதெல்லாம் எளிய முறைகள். நல்ல முகூர்த்த தினத்தில் கணபதி ஹோமம் செய்ய குருக்கள் கிடைக்கவில்லை என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி விநாயகரை வணங்கலாம். புதிய வீட்டில் குடிபுகுந்த பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து கணபதி ஹோமம் செய்தாலும் தவறில்லை.எனவே, பசுவின் சாணத்தையும், அருகம்புல்லையும் விநாயகராகப் பிடித்து, தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லி வழிபட்ட பின்னர் பால் காய்ச்சி குடிபுகுந்தாலும் எந்த பாதிப்பும் வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக